எர்த் கேர்ல்: சுனாமி

無料


利用不可



எர்த் கேர்ல்: சுனாமிக்குத் தயாராகுதல் என்பது இருவழித் தொடர்பு விளையாட்டு. இது சுனாமி அல்லது நிலநடுக்கம் ஏற்படும்போது, கரையோரங்களில் வசிப்போர் உயிர்பிழைக்கும் விகிதத்தை அதிகரிக்க சரியான உத்திகளைப் பயன்படுத்தி முடிவுகளை எடுப்பது குறித்ததாகும். சந்தை, வரைபடம், கருவிப்பெட்டி, இருபத்தி நான்கு விளையாட்டு நிலைகள் ஆகிய நான்கு முக்கிய பகுதிகளில் விளையாட்டு இடம்பெறும். அவற்றில், மக்களை வெளியேற்றும் கற்பனைச் சூழ்நிலைகளும் இருக்கும். விளையாட்டாளர்கள் சுறுசுறுப்பாக செயல்படவேண்டும். அதோடு, எர்த் கேர்ல் கொடுக்கும் பொது அறிவு, குறிப்புகள், கருத்துகள் ஆகியவற்றையும் கவனிக்கவேண்டும். மேலும், சந்தையிலுள்ள மக்களிடம் பேசி சுனாமியைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல், சரியான கருவிகளைத் தேர்ந்தெடுத்தல், இடத்தை ஆராய்தல், சரியான முடிவுகளை எடுத்தல் ஆகியவையும் இதில் உண்டு. விளையாட்டாளர்களின் வெற்றி, அவர்கள் எந்தளவு சூழ்நிலைகளை சமாளிக்கிறார்கள் என்பதைப் பொருத்திருக்கிறது.